போளூர் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை சேத்துப்பட்டு ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-18 04:45 GMT

போளூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

போளூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தொடங்கி வைத்தார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு பொதுமக்கள் நலன் கருதி இலவசமாக வழங்கி வருகிறது.

மேலும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். முக கவசம் கட்டாயம் அணியுங்கள் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News