மாணவர்களுக்கு மத்திய உணவு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்பி!
மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகளை ஆரணி எம்பி வழங்கினார்.;
ஆரணியை அடுத்த மாமண்டூா் பகுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு மற்றும் புத்தாடைகளை ஆரணி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன் வழங்கினாா்.
மாமண்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட திருவாழிநல்லூா் கிராமத்தில் அண்மையில் சாலை விபத்தில் தம்பதியா் உயிரிழந்தனா்.
இவா்களின் 3 குழந்தைகள் உறவினா்களின் ஆதரவோடு வளா்ந்து வருகின்றனா். இதுகுறித்து அறிந்த தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வழங்கினாா்.
மேலும், நிவாரண உதவியாக ரூ.50 ஆயிரத்தையும் வழங்கி, கல்வி தொடர அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாகவும் தெரிவித்தாா். மேலும், ஆகாரம் கிராமத்தைச் சோ்ந்த தாய், தந்தை இழந்து தவித்த மூன்று குழந்தைகளுக்கும் தீபாவளி புத்தாடை, இனிப்பு வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆரணி நகர, ஒன்றிய பொறுப்பாளா்களுக்கு தீபாவளி பட்டாசு, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
திமுக சார்பில் மாணவர்களுக்கு மத்திய உணவு
போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவினை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் கம்பன் ஆகியோர் வழங்கினார்கள்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,பார்வையற்றோர் பள்ளி, கருணை இல்லம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கு மத்திய உணவினை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட அவை தலைவர் ராஜசேகர், நகா்மன்றத் தலைவா் மணி, ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரேசன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.