குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
Gram Sabha Meeting- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்
Gram Sabha Meeting- குடியரசு தினத்தன்று, தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தூய்மைப் பணி, அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், மேல்நிலை நீர்த்தேக்கதொடட்டியை சுத்தம் செய்தல், டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், அவற்றின் முன்னேற்றம், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல், திடக்கழிவு மேலாண்மை, அனைத்து வீடுகளிலும் கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்துதல், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை தக்கவைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் இதர பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் நடைபெறும் இந்த கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பங்கு பெற்று கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து தங்கள் கருத்துகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2