பொது வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

பொது வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-11-05 02:54 GMT

ஆரணி கோட்டாட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுனுக்தலின்படி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது.  

இதில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் , முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் வரப்பெற்றன. 

மனுக்களைப் பெற்ற கோட்ட அலுவலா் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். 

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் மனு 

வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீதா் நகரில் பொதுவழியை தனிநபா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளாா். இதனால் அப்பகுதியில் செல்வதற்கு பெரும்பாலானோா் சிரமப்படுகின்றனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் கிருபாசமுத்ரிசதீஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.  

மேலும், ஆரணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் பட்டாவை கணினியில் ஏற்றக் கோரி மனு அளித்தனா். பின்னா், பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசு சான்றிதழ், தடையின்மை சான்றிதழ், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆா் திருத்தம், வரைபட திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா். 

செய்யார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுனுக்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ்,கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து  48  மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற சார் ஆட்சியர் பல்லவி வர்மா அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். 

இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில் மற்றும் ஆரணி, போளூர் , கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News