வழக்கறிஞர் சத்தியா குடும்பத்திற்கு சேமநல நிதி ரூ.7 லட்சத்திற்கான காசோலை வழங்கல்

பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜி.சத்தியா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் அகால மரணம் அடைந்தார்;

Update: 2022-09-17 02:15 GMT

ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிசெந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு ஜி.சத்தியாவின் குடும்பத்துக்கு சேமநல நிதி ரூ.7 லட்சத்திற்கான காசாலையை அவரது மனைவி உமா மகேஸ்வரியிடம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள 43,பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜி.சத்தியா ஆவார்.இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் அகால மரணம் அடைந்தார்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி.சத்தியா குடும்பத்திற்கு சேமநல நிதி ரூ.7 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க பார் கவுன்சில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் எ.சீனிவாசன் தலைமை வகித்தார்

சிறப்பு நீதிபதி பாரதி,அரசு வழக்கறிஞர் வெஸ்லி, சங்கக்காப்பாளரும்,முன்னாள் அரசு வழக்கறிஞருமான பி.என்.தீனதயாளன், சங்கச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், துணைத் தலைவர் சாமுவேல்,துணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிசெந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு ஜி.சத்தியாவின் குடும்பத்துக்கு சேமநல நிதி ரூ.7 லட்சத்திற்கான காசாலையை அவரது மனைவி உமா மகேஸ்வரியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,பத்து மாதங்களுக்குள் வழக்கறிஞர் சத்தியா குடும்பத்துக்கு சேம நல நிதி கிடைக்க உதவி புரிந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமுல்ராஜுக்கு நன்றி தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில்,மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், பி.எம்.சாமி, பார்த்திபன்,வெற்றி தமிழன், வேல்முருகன், பாலசுப்ரமணியகுமார், முனுசாமி,ஆடிட்டர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.முடிவில் நூலகர் சாந்தகுமார் நன்றி கூறினார்.





Tags:    

Similar News