புத்தாண்டு விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை
புத்தாண்டு தினத்தில் விபத்துக்களை தவிர்க்க, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முக்கிய நெடுஞ்சாலைகளில் 2 கிமீக்கு ஒரு இடத்தில் வாகன சோதனை செய்யப்படும் என்றும், வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி குடித்துவிட்டும், வேகமாகவும், இரு சக்கர வாகனத்தில் 3 பேராக பயணிப்பவர்களின் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யபடும் என்று மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். மற்றும் முக்கிய சுற்றுலா தளமான பழவேற்காடு, பூண்டி நீர் தேக்கம் ஆகிய இடங்களுக்கு 31.12.2020 முதல் 03.01.2021 ஆகிய தேதி வரை பொது மக்கள் வர அனுமதி கிடையாது, அனைத்து பொது மக்களும் இந்த உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும். புத்தாண்டு தினத்தன்று விபத்துக்களை தவிர்க்க காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் கேட்டுக்கொண்டார்.