ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் திருவள்ளூரில் கைது செய்தனர்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் திருவள்ளூரில் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் தலைமறைகினர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் செல்போன் எண்ணை வைத்து சோதனை மேற்கொண்டதில் 2 பேர் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா மற்றும் திருவள்ளூர் எஸ்பி., அரவிந்தன் ஆகியோருக்கு கொடுத்த உத்தரவின் பேரில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் டவரை வைத்து அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்த போது லாரி ஒன்றில் செல்வது உறுதியானது.
இதனையடுத்து காவல் துறையினர் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து விரட்டி வந்தனர். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டு இருப்பது தெரியவந்தது. அப்போது திருவள்ளூர் எஸ்பி., அரவிந்தன், காஞ்சிபுரம் எஸ்பி. சண்முகப்பிரியா தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் லாரியை மடக்கி சோதனை செய்த போது அந்த லாரியில் ராஜஸ்தான் மாநிலம் பராக்பூர் பகுதியை சேர்ந்த வாசிம் மற்றும் ஹாசன் ஆகிய 2 பேர் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஹைதராபாத்தில் ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.