இன்று காமராசர் பிறந்ததினம்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் கல்வித்துறை

முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட திருப்பூர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-07-15 01:06 GMT

தமிழகத்தில் கல்விக்கண் திறப்பதற்கு காரணமாக இருந்த, முன்னாள் முதலமைச்சர் காமராசரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று கல்வி வளர்ச்சி நாளாக கல்வித்துறை அலுவலகங்களில் கொண்டாட, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை வெளியிட்டு அறிக்கையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் பிறந்தநாள், ஜூலை15, கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும்,  கொரோனா குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி,  கல்வி வளர்ச்சி நாளினை கொண்டாட வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News