100%  தடுப்பூசி இலக்கை எட்டிய விஜிலாபுரம் ஊராட்சி மன்ற  தலைவருக்கு பாராட்டு

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி 100%  இலக்கை எட்டிய விஜிலாபுரம் ஊராட்சி மன்ற  தலைவருக்கு வட்டார மருத்துவ அலுவலர் பாராட்டு

Update: 2022-01-22 12:16 GMT

100% இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி குமாருக்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் ஊராட்சியில் உள்ள குடும்பங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 2725 பேர் உள்ளனர் இதில் 18 வயதிற்கு மேற்பட்ட  1510 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 100% தடுப்பூசி  செலுத்திய ஊராட்சியாக விஜிலாபுரம் ஊராட்சி உள்ளது. இதில் 100% இலக்கை எட்ட  உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி குமாருக்கு  ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி சால்வை அணிவித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உடன் இணைந்து பணியாற்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி செயலர்,மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்,வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும்  பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

Tags:    

Similar News