சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: வாணியம்பாடியில் பரபரப்பு

வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-14 11:20 GMT

பெட்ரோல் குண்டை வீசும் நபர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை வசித்துவருபவர் சவுகத் அலி (33). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது கடைக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சவுகத் அலியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த சவுகத் அலியின் உறவினர் ஒருவர் மாற்றுத்திறனாளியான அவர் இது குறித்து தகராறில் ஈடுபட்ட இளைஞரிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இளைஞர் மாற்றுத் திறனாளியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சவுகத் அலி கடைக்கு மது பாட்டிலுடன் அதே இளைஞர் வந்துள்ளார். அப்போது திடீரென மது பாட்டிலில் தீ வைத்து கடைக்குள் வீசினார். இதில் கடையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து சவுகத் அலி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை காட்சிகளை வைத்து இளைஞரை தேடி வருகின்றனர்.

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (2). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போலீசார் முகேஷை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags:    

Similar News