வாணியம்பாடியில் வீடு புகுந்து தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு : போலீஸார் விசாரணை
வீட்டின் மேற்கூரையைப்பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்;
வாணியம்பாடியில் மேற்கூரையைப் பிரித்து வீட்டினுள்ளே பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்ப்பேட்டை கல்மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் சிக்கந்தர். இவர் வீட்டின் ஒரு பகுதியில் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தின்பண்டங்கள் தயாரிக்கும் வீட்டிற்க்கு வந்த பார்த்த போது வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.