வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி முகாம்

வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்;

Update: 2021-11-18 12:45 GMT

ஆலங்காயம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், மெகா கொரோனோ தடுப்பூசி முகாம் கிராம சுகாதார செவிலியர்கள், நடமாடும் மருத்துவமனை மற்றும் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை சென்னையிலிருந்து வருகை புரிந்த இணை இயக்குனர் சுரேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  கொட்டும் மழையிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன

இதில் துணை இயக்குனர்  செந்தில் சுகாதாரப்பணிகள், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உடன் இருந்தனர்..

Tags:    

Similar News