வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் களப்பணி!

வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் விதை பந்துகளை தயார் செய்து வருகின்றனர்.

Update: 2021-05-12 02:22 GMT

விதை பந்து தயாரிக்கும் பணியில் மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான அண்ணா நகரில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன.  இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி இளைஞர்கள் நற்பணி மன்றம்  செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், கொரோனா காலத்தில் வனப்பகுதியை பசுமையாக மாற்றுவதற்காக விதைப்பந்து தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்

  ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் விதை பந்துகளை தயார் செய்து அவற்றை வனப்பகுதியில் வீசப்படும். இதனால் மழைக்காலங்களில் அந்த விதைப்பந்துகள் செடிகளாக வளர்ந்து இயற்கை வளங்களைக் காக்க பேருதவியாக இருக்கும்.  ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


விதைப்பந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாணவர்கள்

கடந்த ஆண்டு மாவட்ட  ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி அந்த விதை பந்தினை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளோடு இணைந்து வனப்பகுதியில் வீசினர். தொடர்ந்து இந்த ஆண்டு குருடனின் காலகட்டத்தில் விதைப்பந்து தயாரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியின் மூலம் கொரோனா ஊரடங்கை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் செயலில் ஈடுபட செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News