வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

வாணியம்பாடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வின்போது ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

Update: 2021-11-12 18:19 GMT

ஆவணங்களின்றி இயக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட பள்ளி பேருந்துகள் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி அருகே நேற்று வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடராமன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்து செய்தனர். அந்த ஆய்வின் போது தனியார் பள்ளி பேருந்துகளின் ஆவணங்கள் முறையாக இல்லை என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 2 பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து அவற்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று இருசக்கர வாகனங்கள் உரிய ஆவணங்களின்றி ஓட்டி வந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர். 

மேலும் வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு முழுமையாக ஆவணங்களோடு பள்ளி வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Tags:    

Similar News