45 நாட்களுக்கு பிறகு 'தலை காட்டிய' அரசு பஸ் : பூஜை போட்டு வரவேற்ற கிராமத்தினர்!

வாணியம்பாடி அருகே, ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு வந்த அரசு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலைகிராம மக்கள் வரவேற்றனர்.;

Update: 2021-06-29 11:05 GMT

வாணியம்பாடி அருகே மலைரெட்டியூரில்,  ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு வந்த அரசு பேருந்துக்கு, சிறப்பு பூஜை செய்து வரவேற்ற மலை கிராம மக்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்தொற்று  காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், கடந்த திங்கட்கிழமை முதல், மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தொற்று அதிகமுள்ள ௧௧ மாவட்டங்கல் தவிர்த்து, பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து, ஆலங்காயம் வழியாக மலைரெட்டியூர் செல்லக்கூடிய அரசு பேருந்து இன்று இயக்கப்பட்டது. பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைரெட்டியூர் மலை கிராமத்திற்கு  வந்த அரசு பேருந்தை கண்டு பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

கடந்த  45 நாட்களுக்கு பிறகு, அரசு பேருந்து தங்கள் கிராமத்துக்குள் வந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அரசு பேருந்துக்கு சூடம் ஏற்றி காட்டி, தேங்காய் உடைத்து, பூஜைகள் செய்தனர். இது, அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை நெகிழச் செய்தது.

Tags:    

Similar News