வாணியம்பாடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே வாகன தணிக்கையின்போது சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட 1 டன் ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டது
தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு லாரி, சரக்கு வாகனங்கள் போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை கொண்டு செல்வது போல் மேலே முழுவதும் காய்கறி கூடைகளை அடுக்கிவைத்து வாகனத்தில் 1 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஓட்டுனர் அங்கிருத்து தப்பி ஓடினார்.
வாகனம் மற்றும் 1 டன் அரிசியை பறிமுதல் செய்த கிராமிய போலீஸார் ஓட்டுனரை தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திருப்பத்தூர் #வாணியம்பாடி #ரேஷன்அரிசிகடத்தல் #Tirupathur #Vaniyambadi #Rationshop #Rice #Smuggling #பறிமுதல்