திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் பார்வையிட்டார்
திருப்பத்தூர் அருகே கொத்தக்கோட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பார்வையிட்டார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கலந்துகொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என கூறினார்.
இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி முகாமில் 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடைந்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்