வாணியம்பாடியில் எஸ்.பி விஜயகுமார் காவலர்களுக்கு முக கவசம் வழங்கினார்

ஊரடங்கு நேரத்தில் பணியில் உள்ள காவலர்களுக்கு எஸ்.பி விஜயகுமார் முக கவசம் வழங்கினார்

Update: 2021-05-22 13:24 GMT

கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசாருக்கு முக கவசம் வழங்கிய  எஸ்.பி. விஜயகுமார்.

 வாணியம்பாடியில் ஊரடங்கு நேரத்தில் பொது மக்களை கட்டுப்படுத்த பணியில் உள்ள காவலர்களுக்கு எஸ்.பி விஜயகுமார் முக கவசம் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் மலை அதிகம் தீவிரமடைந்து வருகிறது.  நாள் ஒன்றுக்கு 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.  வாணியம்பாடி பகுதியில் காவல் துறையினர் எல்லைப் பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து வாகனங்கள் மற்றும் தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்.பி விஜயகுமார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை ஆய்வு செய்தார்.  அப்பொழுது பணியில் உள்ள காவலர்களுக்கு முக கவசம் மற்றும்  கூல்டிரிங்ஸ் வழங்கினார். மேலும் தடுப்பு நடவடிக்கை எவ்வாறு உள்ளன என்பதை வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியத்திடம்  கேட்டறிந்தார்.  

 தேவையின்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News