வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து கடைகளை அடைப்பதாக அறிவிப்பு
வாணியம்பாடியில் வணிகர்களுக்கு தொடர்ந்து 5000 ஆயிரம் அபராதம் விதிக்கும் அதிகாரிகளை கண்டித்து அத்தியாவசிய கடைகளை அடைப்பதாக அறிவிப்பு.;
கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு கடந்த 14ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மளிகை காய்கறி உள்ளிட்ட கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கொரோனவை காரணம் காட்டி நகராட்சி, வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், அரசு விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்து ரூ.5000 வரை அபராத தொகையை செலுத்துவதை விட கடைகளை அடைத்து வீட்டிலேயே இருக்க முடிவு செய்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வணிகர்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசி வருவதை கண்டித்து, மறு அறிவிப்பு வரும் வரை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.