வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில் நூதன முறையில் திருட்டு
வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த கூலி தொழிலாளியை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மாற்றி நூதன முறையில் திருட்டு
வாணியம்பாடியில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த கூலி தொழிலாளியை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மாற்றி நூதன முறையில் திருட்டு சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளது. மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்மில் கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த கேஸ் கம்பெனியில் பணியாற்றி வரும் கூலித்தொழிலாளி சரவணன் என்பவர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது ஏடிஎம்மில் இருந்த மற்றொரு மர்மநபர் பணம் எடுத்து தருவது போல் நாடகமாடி கூலித்தொழிலாளி சரவணனை திசைதிருப்பி தான் மறைத்து வைத்திருந்த போலி ஏடிஎம் அட்டையை கொடுத்து சரவணனின் ஏடிஎம் கார்டு பெற்று கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அடுத்து 2 நாட்களில் ரூ.15000 ஆயிரம் ரூபாய் வங்கியில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்று அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஏடிஎம் கார்டு செக் செய்ய போன ஏடிஎம் கார்டு போலியானது என்பதை அறிந்து அதிர்ந்து போன சரவணன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் கார்டில் கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்