வாணியம்பாடியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு 5 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரி பறிமுதல். ஓட்டுனர் தப்பி ஓட்டம்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டுவதாக வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் செட்டியப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்த போது, லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.
பின்னர் லாரியை சோதனை மேற்கொண்டதில் 120 மூட்டைகளில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது . லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், வேலூர் அரியூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் பழனி என்பவர் வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
வருவாய்த்துறையினர் லாரியை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Tirupathur #திருப்பத்தூர் #Vaniyambadi #வாணியம்பாடி #PDSRice #ரேஷன்அரிசி #Smuggling #கடத்தல் #லாரி #Lorry #Seized #பறிமுதல்