திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது;

Update: 2021-09-02 13:48 GMT

கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 நடத்திடும் பொருட்டு 6 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,779 கிராம ஊராட்சி வார்டுகள், 208 கிராம ஊராட்சி தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றிற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

13 மாவட்ட ஊராட்சி வார்டுகளுககு 2 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 13 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 24 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சி தலைவர் 208-க்கு 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும் 208 ஊராட்சி வார்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிக்கை வெளியிடுதல். வேட்பு மனுக்களை பெறுதல், சின்னங்களை ஒதுக்குதல், வாக்குச்சாவடி மையங்களுககு; அடிப்படை வசதிகளை செய்தல், வாக்குச்சாவடி மையங்களுககு; தேர்தல் அலுவலர்களை நியமித்தல் போன்ற பணிகளை செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, இணை இயக்குநர்(வேளாண்மை) ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹரிஹரன், உதவி இயக்குநர் அருண், உதவி திட்ட அலுவலர்கள் ரூபேஷ்குமார், விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News