உதவித்தொகை கேட்டு  ஆட்சியரிடம் மனு; மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய எம்எல்ஏ.,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி சிறுவன் மனு அளித்தார்.

Update: 2021-08-09 16:54 GMT

தனது தாயருடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி சிறுவன்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி கூயாலி வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் சதிஷ் (வயது 19). இவர் 80 சதவீதம் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரால் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு அடுத்தவர்களின் ஆதரவின் இல்லாமல் போகமுடியாது. உணவு  சாப்பிட முடியாது.

இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதன்பின் உதவித்தொகை வழங்க ஆணை வழங்கபட்டு இதுநாள் வரை உதவித்தொகை வழங்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும் எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சதிஷ் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். இதனை பார்த்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் போன் செய்து அவருக்கு  உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News