கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவி
திருப்பத்தூரில் கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவிக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் சரக பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது பிள்ளைகள் உயர்கல்விக்காக காவல்துறை சார்பில் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இன்று 11 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டாக்டர். விஜயகுமார் வழங்கினார்.
அப்போது தலைமை காவலர் ரமேஷ் என்பவரின் மகள் அனுசுயா என்பவருக்கு முதலிடத்தை பிடித்ததற்காக அரசு உதவித்தொகை 7,500 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாணவி அனுசுயா இந்த உதவித்தொகையை கொரோனா உதவித் தொகையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் என்று மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
இதனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாணவி அனுசுயாவை வெகுவாக பாராட்டினார்