ஏலகிரி மலையில் மண்சரிவு; மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஏலகிரி மலையில் மண்சரிவு காரணமாக சாலையில் விழுந்த பாறைகளால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஏலகிரி மலைப்பாதையில் சாலையில் விழுந்துள்ள பாறைகள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை 18 கொண்ட ஊசி வளைவுகளை கொண்டு உள்ளன.
இதில் மூன்று மட்டும் எட்டாவது கொண்ட ஊசி வளைவில் நேற்று இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பெரிய பெரிய பாறைகள் மரங்கள் சாலையில் விழுந்ததால் ஏலகிரிக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டன. இதனால், ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.