ஜோலார்பேட்டை: கொரோனா நிவாரணம் ரூ 2000 வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டையில் கொரோனா நிவாரண தொகையாக  ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன.;

Update: 2021-05-15 05:00 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 ரேஷன் கடைகளில் உள்ள 78 ஆயிரத்து 620 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000வழங்கப்பட உள்ளன,

இன்று செட்டியப்பணூர், பாச்சல், கத்தாரி ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000  வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இதில் திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட துணை செயலாளர் சம்பத், வேலூர் மேற்கு  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News