ஜோலார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் தேவராஜ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஏரி பள்ளம் பகுதியிலிருந்து கேரளா மேளம், நையாண்டி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக வந்தனர். நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றவுடன் தொகுதியில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட தண்ணீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த, இப்பகுதியில் சிப்காட் ஒன்றை அமைத்து அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை கடந்த 10 ஆண்டுகளாக சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமாக கிடக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை, பாலாற்றில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கால்வாய் மூலமாக தண்ணீர் எடுத்து வரப்பட்டு செட்டேரி டேம் நிரப்பப்பட்டு அதன்மூலம் விவசாயம் பெருக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.