திருச்சியில் உலக வன உயிரின பாதுகாப்பு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

திருச்சியில் உலக வனஉயிரின பாதுகாப்பு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-03 05:45 GMT
திருச்சியில்  உலக வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்ததார். அருகில் திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் உள்ளார்.

உலக வன உயிரின வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காட்டில் வாழும் வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது.

இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி பெரிய மிளகுபாறை, அரிஸ்டோ ரவுண்டானா, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், தலைமை தபால் நிலையம், கண்டோன்மெண்ட், எம்.ஜி.ஆர். சிலை வழியாக பிஷப் ஹீபர் கல்லூரியை சென்று அடைந்தது.

அதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவர்களுக்கு வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு அந்த புகைப்படங்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் கிரன், பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன், உதவி வன பாதுகாவலர்கள் நாகையா, சம்பத்குமார், சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வனத்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News