திருச்சி: போட்டோ ஸ்டுடியோக்கள் திறக்க அனுமதி: அமைச்சர் நேருவிடம் கோரிக்கை

திருச்சியில் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனு அமைச்சர் கே.என்.நேருவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-13 11:14 GMT

திருச்சி மாவட்ட வீடியோ, போட்டோ சங்க உறுப்பினர்கள் அமைச்சர் நேருவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க தலைவர் நிக்சன் சகாயராஜ், செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்திரத்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருச்சி மாவட்ட வீடியோ, போட்டோ சங்க உறுப்பினர்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் எங்கள் தொழில் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. திருச்சி மாவட்டம் துறையூர், மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துவரங்குறிச்சி, திருச்சி மாநகர் பகுதியில் குறிப்பாக சிங்காரந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கலர் லேப், போட்டோ, ஸ்டூடியோ தொடர்பான நிறுவனங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், மாநகரப் போலீஸ் கமிஷனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு போட்டோ மற்றும் வீடியோ தொடர்பான கடைகள் திறப்பதற்கு அனுமதி பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் கூடுவதற்கு சாத்தியக் கூறுகள் எங்கள் நிறுவனங்களில் இல்லை.

இருப்பினும் அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வீடியோ, போட்டோ தொடர்பான கடைகளை திறந்து தொழில் நடத்த அனுமதி பெற்றுத் தரும்மபடி கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News