சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : திருச்சி மாநகர் அதிமுக முடிவு
சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சியில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குதிருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார்.
தீர்மானம் :
முன்னாள் முதல்வர் மறைவுக்கு பின்னர் அ.இ.அ.தி.மு.வில் புயல் வீசும் அனைத்தும் தகர்ந்து போய்விடும் இனி தமிழ் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும் என்று எண்ணியவர்களுக்கு ஓர் சிறப்பான அம்மாவின் வழியில் அம்மாவின் ஆட்சியை நடத்தி தமிழ் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் நம்முடைய இருபெரும் தலைவர்கள் .
தி.மு.க.வின் சூழ்ச்சிகள் , தந்திரங்கள் , சதிசெயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரண்பை பெற்று கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது . கழகத்தின் சார்பில் பிரதான எதிர்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வலுவான ஓர் எதிர்க்கட்சியாக உள்ளது .
இந்நிலையில் நம் உழைப்பை சுரண்டும் வகையில் .சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் கழகத்தை வசப்படுத்திக் கொள்ளவும் . அ.இ.அ.தி.மு.கழகத்தை அபகரித்து கொள்ள வஞ்சக வலையை விரித்து கொண்டுருக்கிறார்கள் .
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் வலிவும் , பொலிவும் கழக தொண்டர்களின் பெரும்பான்மையும் மக்களின் செல்வாக்கு பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் சசிகலா தன் குடும்பத்திற்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும் தேடி கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்க போவதாக ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதுமான , வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் .
சசிகலாவையோ அவருடைய குடும்பத்தையோ ஒருபோதும் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவும். மாட்டோம்.
சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு மாறாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சண்யமின்றி தலைமை கழகத்தின் மூலமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட கழக அணி செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.