திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் இரண்டாம் கேட் திறப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின்இரண்டாவது கேட் திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.

Update: 2021-09-18 11:13 GMT

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில்.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையமும் ஒன்றாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை பொறுத்தவரை ஜங்ஷன் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் பிரதான நுழைவு வாயில் ஒன்றும் ரயில் நிலையத்தின் பின்பகுதியில் கல்லுக்குழி பகுதியில் 2-வது நுழைவுவாயில் ஒன்றும் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டதால் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வருவதற்கும், இறங்கி செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

கல்லுக்குழி பகுதியில் உள்ள 2-வது நுழைவாயில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும் அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் கல்லுக்குழி பகுதியில் உள்ள 2-வது நுழைவுவாயில் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

2-வது நுழைவாயில் திறக்கப்பட்டு இருப்பதால் திருச்சி நகரின் சுப்பிரமணியபுரம், விமான நிலையம், கே கே. நகர், எடமலைபட்டி புதூர், பொன்மலை பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News