அமைச்சர் உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம்

அமைச்சர் நேரு உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம் பணி தொடங்கியது.;

Update: 2021-09-28 10:52 GMT
திருச்சி கருமண்டபம்  ஜே.ஆர்.எஸ். நகரில் மின்கம்பம் நடும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு பகுதியை சேர்ந்தது கருமண்டபம் ஜே.ஆர்.எஸ். நகர். புதிதாக உருவாகி வரும் இந்த நகரில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவிடம் முறையிட்டனர். அமைச்சர் நேரு உடனடியாக அங்கு மின் கம்பங்களை நட்டு மின்விளக்கு வசதி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஜே.ஆர்.எஸ்.நகரில் மின்கம்பங்களை நடும் பணி 'ஜரூர்' ஆக நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் நேருவுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News