பெரிய மிளகுபாறையில் குடிநீர் தொட்டி அமைச்சர் கே.என்.நேரு திறப்பு
திருச்சி மாநகராட்சி 46வது வார்டு பெரிய மிளகுபாறையில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.;
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம்- வார்டு எண் . 46 –ல் பொதுநிதி கீழ் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் தரைமட்ட மின் மோட்டாரின் கூடிய தண்ணீர் தொட்டியைசுமார் 200 குடும்பங்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் . திரு . K.N. நேரு திறந்து வைத்தார்.. இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சித்த மருந்தான கபசுர குடிநீரை பொதுமக்கள் வழங்கினார். பின்பு குளம் அமைத்துள்ள பகுதியை ஆய்வு மேற்கொண்டார்...
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம்,குமரேசன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகரச் செயலாளர் அன்பழகன் வட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.