நகராட்சி, மாநகராட்சி பொறியாளர்கள் சங்கம் ரூ 25 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சர் நேருவிடம் வழங்கல்

திருச்சி தமிழ்நாடு நகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில் ரூ. 25 லட்சத்திறகான காசோலையை அமைச்சர் கே.என்.நேருவிடம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினர்.;

Update: 2021-05-30 04:14 GMT

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் நகராட்சி பொறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 22 லட்சத்திற்கான வரைவோலையையும், திருச்சிரைமாநகராட்சி பொறியாளர்கள் ரூ 3 லட்சத்திற்கான வரைவோலையையும் வழங்கினர். அருகில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ உள்ளனர்.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.22 லட்சத்திற்கான வரைவோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் நகராட்சி. .பொறியாளர் சங்க தலைவர் கமலநாதன் வழங்கினார்.

இதேபோல திருச்சி மாநகராட்சி. பொறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக ரூ. 3 லட்சத்திற்கான வரைவோலையை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவள்ளி வழங்கினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News