திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு, தலா 30 முட்டைகள் அமைச்சர் வழங்கல்
திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு தலா 30 முட்டைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தமிழகத்தில் கொரானோ நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நோய் தொற்றை தடுக்கும் வகையில் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி தூய்மை பணியாளர்களான முன் கள பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நிரந்தர மற்றும் தற்காலிக முன் களப்பணியாளர்கள் 3000 பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 30 முட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி மற்றும் மாநகராட்சி அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.