திருச்சி- தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருச்சியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து, வீடியோ படக்காட்சிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீடியோ வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவா; சிவராசு,கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு வீடியோ வாகனத்தின் மூலம் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து விழிப்புணா;வு ஏற்படுத்திடும் வகையில் இன்று (15.09.2021) முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2021 வரை 14 நாட்கள் (விடுமுறை நாட்கள் நீங்கலாக) இந்த படக்காட்சி, ஒவ்வொரு நாளும்; ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் காண்பிக்கப்படுகிறது.
அதன்படி 15ஆம் தேதி அந்தநல்லூர்,16ஆம் தேதி மணிகண்டம், 17ஆம் தேதி திருவெறும்பூர், 20 மற்றும் 21ஆம் தேதி மணப்பாறை, 22ஆம் தேதி வையம்பட்டி, 23ஆம் தேதி இலால்குடி, 24ஆம் தேதி மண்ணச்சநல்லூர், 27ஆம் தேதி புள்ளம்பாடி, 28ஆம் தேதி முசிறி, 29ஆம் தேதி தொட்டியம், 30ஆம் தேதி தா.பேட்டை, 1ஆம் தேதி துறையூh;, 2ஆம் தேதி உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் வீடியோ படக்காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. இதில் கழிவறைப் பயன்பாடு, திடம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் தவிh;த்தல் ஆகிய விழிப்புணர்வு படக்காட்சிகள் காண்பிக்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டோh; கலந்து கொண்டனர்.