ரெம்டெசிவிர் மருந்துக்கு கிராக்கி : திருச்சியில் குவிந்த பொதுமக்கள்

திருச்சியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம்

Update: 2021-05-10 07:58 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து வருகிறது.

மருந்து வாங்குவதற்கான நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது அதன்படி நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைத்தல் படி மருத்துவ சீட்டு மற்றும் நோயாளிக்கான ஆதார் அட்டை, மருந்து வாங்க வந்திருக்கும் நபருடைய ஆதார் அட்டையும் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. நோயாளிக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மருத்துவ கல்வி துறை அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் இன்று ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், ஒரு நாளில் 50 பேர் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் அர்ஷீயாபேகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேலும் 50 பேருக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து 50 பேர் மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

Tags:    

Similar News