திருச்சியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 2-வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா
திருச்சியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 2-வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா செய்தனர்;
ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது/. அன்று தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரி தமிழகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் துவங்கி, கால அவகாசம் வழங்கி தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி, ஹோலி கிராஸ் கல்லூரி முன்பு அந்த மையத்தில் தேர்வு எழுத வந்த அனைத்து கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றும் 2-வது நாளாக மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்துக்கொண்டு கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.