திருச்சியில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மாநில கூட்டம்
திருச்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கங்களின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது.;
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்க மாநில நிர்வாக குழுவில் பொதுச்செயலாளர் மருத முத்து பேசினார்.
தமிழ்நாடுஅ ரசு ஓய்வ பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் பென்சனர்கள் நல சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார்.
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும், மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை அமல் படுத்த வேண்டும், கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கவேண்டும், நீதிமன்ற தீர்ப்பை காலம் கடத்தாமல் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.