திருச்சியில் முதியோர்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கு உதவிய சமூக ஆர்வலர்

திருச்சியில் முதியோர்கள் உதவி தொகை பெறுவதற்கு வசதியாக சமூக ஆர்வலர் வங்கி கணக்கு தொடங்கி உதவி செய்துள்ளார்.;

Update: 2021-09-10 13:37 GMT
திருச்சியில் ஒய்வூதியம் பெறுவதற்காக  முதியோர்களுக்கு  வங்கி கணக்கு தொடங்கி அதனை வழங்கிய சமூக ஆர்வலர்

திருச்சி மாநகராட்சி ஐம்பத்தொன்றாவது வார்டை சேர்ந்தவர் புத்தூர் சார்லஸ். சமூக ஆர்வலரான இவர் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறை மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு இவரது பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்கள் சிலர்  தங்களுக்கு முதியோர் உதவி தொகை வேண்டும் என கேட்டு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு கொடுத்தனர். அமைச்சர் நேரு அவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க ஆவண செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர்கள் முதியோர்  உதவி தொகை நேரடியாக பெறுவதற்கு வசதியாக வங்கி கணக்கு தொடங்க புத்தூர் சார்லஸ் உதவி செய்தார். பதிநான்கு முதியோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புக்கை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News