திருச்சியில் தயாரிப்பு தேதி இல்லாத 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானம் பறிமுதல்

திருச்சியில் தயாரிப்பு தேதி இல்லாத 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-09-09 17:38 GMT

திருச்சி பீமநகரில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

திருச்சி  பீம நகரில் உள்ள ஒரு குளிர்பாணம் தயாரிப்பு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கபட்ட 3000 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யபட்டு வழக்கு போடுவதற்காக ஒரு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடதிற்கு அனுப்பி வைக்கபட்டது

இது தொடர்பாக டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில் குளிர்பாணம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டம் 2006 ன் படி கடுமையான நடவிடக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் பொதுமக்கள் உணவு கலப்படம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9944959595 9585959595  ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். என்றும் கூறி உள்ளார்.




Tags:    

Similar News