திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பலி இல்லை
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பலி இல்லை என்ற நிலை உள்ளது.;
தமிழகத்தில் இன்று கொரோனாவாலா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,697.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,594 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 27 பேர் பலியாகி உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் யாரும் பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டுமல்ல நேற்றும், நேற்று முன்தினமும் திருச்சி மாவட்டத்தில் கொரானா உயிர்பலி எதுவும் இல்லை.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் பலியாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துவதில் காட்டும் தீவிரம் ஆகியவற்றின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பும் உயிர் பலி எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.