டாஸ்மாக் கடைகளில் அதிக மதுபாட்டில்கள் வாங்க ஆர்வம் காட்டிய மது பிரியர்கள்

10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Update: 2021-05-08 14:30 GMT

10 ம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக செயற்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சியில் உள்ள மதுபான கடைகளில் மது வாங்க மது குடிப்போரின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 183 டாஸ்மாக் கடைகளும், 4 எலைட் கடைகளும் உள்ள நிலையில் இரண்டு வார பொது முடக்கத்தின் போது டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் பெருமளவில் மது பாட்டில்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் டாஸ்மாக் கடைகளில் 11.30 மணி முதல் 12 மணி வரை அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் 12 மணிக்கே மூடிவிடும் என்று பலரும் டாஸ்மாக் கடையில் குவிந்தனர்.

அதுமட்டுமின்றி இரண்டு வாரம் பொது முடக்கம் என்பதால் தேவையான மதுபாட்டில்களை வாங்க வேண்டும் என காத்திருந்து வாங்கி சென்றனர். பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்த நிலையில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பெரிய அளவிலான பைகளுடன் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News