வழக்கறிஞர் வெட்டி படுகொலை ...

கொலை...;

Update: 2021-05-09 18:19 GMT

திருச்சி பீம நகரில் வழக்கறிஞர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி கண்ணன். வழக்கறிஞர்.இவர் வீட்டின் அருகே தனது குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கோபி கண்ணனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே கோபிகண்ணன் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்த நீதிமன்ற காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பீமநகரில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்..

Tags:    

Similar News