திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சாலையில் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-06-26 07:02 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சாலையில் படுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.


திருச்சி:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சாலையில் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரதான சாலையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுடெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் விவசாயிகள் போராட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும். தங்களை டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திறகு செல்ல அனுமதி வழங்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.


Tags:    

Similar News