திருச்சி கல்லூரி வளாகத்தில் பயிற்சி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கல்லூரி வளாகத்தில் பயிற்சி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-09-17 03:45 GMT
திருச்சியில் தற்கொலை செய்த பயிற்சி டாக்டர் ரஞ்சித்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் ரஞ்சித் குமார் (வயது 24). திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்து அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.   கல்லூரி வளாகத்தில் உள்ள அறை எண் 25-ல் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து இவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த இவரது நண்பர் கோகுல் என்பவர் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது. ரஞ்சித்குமார் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது.

உடனடியாக சகமாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர் மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவம் இடம் வந்த திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் ரஞ்சித்தின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News