கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மருத்துவர் சமூக மக்கள் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிதிருத்தும் தொழிலை கையில் எடுத்து சிறிய அளவில் உள்ள கடைகளை முடக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையை போக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உரிமையை வழங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளானோர் கலந்து கொண்டனர. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.