திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Update: 2021-09-24 13:33 GMT
திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா நோயை பூண்டோடு ஒழிப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஏற்கனவே இரண்டு நாட்கள் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில் லட்சக்கணக்கான நபர்கள் ஒரே நாளில் வந்து குவிந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும்கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனி குமார்,மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணி, மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்

Tags:    

Similar News