திருச்சியில் நடந்த இலவச சித்த மருத்துவ முகாமில் மருந்துகள் வினியோகம்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது;
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2069வது இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவ]ன் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
இம்முகாமிற்கு வந்தவர்களை முனைவர் ஐnன் ராஜ்குமார் வரவேற்றார்.பேராசிரியர் அருள் வசந்தம் அரிமா சங்க தலைவர் வசந்தகுமார் ,ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் மற்றும் சத்து மருந்துகள் வழங்கப்பட்டது
இதில் காக்கும் கரங்கள் முதியோர் இல்ல தலைவர் செந்தில் குமார். ஜே.கே.சி அறக் கட்டளை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜ் ,ரவி கமல் ,மதன் காளிக் பாய், சந்தான கிருஷணன், ரிச்சர்டு, பாத்திமா நூர்ஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் சகுந்தலா நன்றி கூறினார்