கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
கன்னியாகுமரி காந்தி சிலை அருகே காந்தி ஜெயந்தி நாளில் உண்ணாவிரதம் இருக்க திருச்சி விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.
தலைநகரம் டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200 விவசாயிகள் கன்னியாகுமரியில் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி ஜெயந்தி தினமான நாளை (அக்டோபர் 2-ந்தேதி) சனிக்கிழமை காலை 7 மணியளவில் பிரார்த்தனை, உண்ணாவிரதம் நடத்த உள்ளனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மதுரை குருசாமி, கோவை ஈஸ்வரன் ஆகியோர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக த இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திருச்சியில் இருந்து 200 விவசாயிகள் கன்னியாகுமரி பயணம் செய்ய உள்ளனர்..